விமான விபத்திற்கு விமானிகளின் தவறான முடிவும் காரணம்..!!

கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானிகளின் தவறான முடிவும் காரணமாக இருக்கலாம் என பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

டுபாயில் இருந்து 190 பயணிகளுடன் இந்தியா வருகை தந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிரங்கியபோது விபத்தில் சிக்கியது.

இதற்கு காரணமாக சீரற்ற காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கூறப்படுகின்ற நிலையில் விமானிகளின் தவறான முடிவும் காரணமாக இருக்கலாம் என பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பலத்த மழை காரணமாக முதல் முயற்சியில் விமானத்தை தரையிறக்க முடியாதபோது விமானத்தை மற்றொரு விமான நிலையத்துக்கு திருப்பாதது விமானிகளின் தவறு என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈரமான ஓடுபாதையில் தரையிறக்கியதன் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு இதேப்போன்ற விபத்து ஒன்று நடந்திருக்கும் நிலையில் மீண்டும் அதைப்போல ஒரு முடிவு எடுத்தது முட்டாள்தனமானது என சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Related posts