வினோநோதாரலிங்கம், செல்வம் அடைக்கலநாதனுக்கு அமோக வரவேற்பு..!!

கற்குழி பொது அமைப்புக்கள் மற்றும் மக்களின் ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வினோநோதாரலிங்கம் மற்றும் செல்வம் அடைக்கலநாதனுக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இருவருக்கும் மாலை அணிவித்து கற்குழி வீதி ஊடாக அழைத்து வரப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

கற்குழி கிராம அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கற்குழி மக்கள் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts