முன்னாள் சீ.ஐ.டி அதிகாரி நிஷாந்த சில்வாவை கைது..!!

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை காணும் இடத்தில் கைது செய்யும் வகையிலான பிடியாணை சர்வதேச பொலிஸார் ஊடாக பிறப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச இரகசியங்களை வெளியிட்டமை, வெளிநாட்டு தூதரங்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தமை, பொய் சாட்சியங்களை உருவாக்கியமை, அரசுக்கு தெரியாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிஷாந்த சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இதனை தவிர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் வெள்ளை வான் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழ் பெண்ணான ஜெயனி தியாகராஜாவிடம் கூறியதாகவும் நிஷாந்த சில்வாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts