‘மாஸ்டர்’ படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..?


தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் இருவரையும் இணைந்து பார்க்க இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரின் சிறுவயது காட்சிகள் சில இருப்பதாகவும் விஜய் சேதுபதியின் சிறுவயது கேரக்டரில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு புதுமை என்னவென்றால் மாஸ்டர் மகேந்திரனுக்கும் விஜய் சேதுபதியே டப்பிங் செய்துள்ளாராம்.

விஜய்சேதுபதி கேரக்டரின் மாஸ்டர் கேரக்டருக்கும் விஜய் சேதுபதியையே டப்பிங் செய்ய வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதுமையை செய்துள்ளதாகவும் இது திரையில் பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Related posts