கோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..!!

கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கிய போது எதிர்பாராத வகையில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த விமானத்தை ஓட்டிய பைலட்டுகள் இருவர் உள்பட 19 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டியும் திரையுலக பிரமுகர்கள் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, காயமடைந்தவர்கள் விரைவாக குணமாக பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

மேலும் விமான விபத்து நடந்த பகுதியில் உள்ள மலப்புரம் மக்கள் செய்த உதவிக்கு தனது வணக்கங்கள் என்று கூறிய அவர், பயணிகளை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரையே கொடுத்த பைலட்டுகள் மரியாதைக்குரியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts