பிரதமர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்..!

நாட்டின் 13வது பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ  இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அலரி மாளிகையில் இன்று  தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

ஓகஸ்ட் 9ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts