நிவ்யோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதன் முறையாக இந்தியக் கொடி..!!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நிவ்யோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதன்  முறையாக இந்திய தேசியக் கொடி பறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் முதன்முறையாக நிவ்யோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் தேசிய கொடி ஏற்றப்படவுள்ளது. இந்நிகழ்வில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நிவ்யோர்க் டைம்ஸ் சதுக்கமும் ஒன்றாகும்.   இங்கு மூவர்ணக் கொடி ஏற்று விழா நடப்படுவது இதுவே  முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts