நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்களுக்கான முக்கிய அறிவிப்பு…!!

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு நடவடிக்கைகள் Online மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தராது, தமது பெயரை பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை, நிழற்படம் மற்றும் சமயம் ஆகியன தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.

Related posts