தாயகம் திரும்பிய மேலும் 222 பேர்..!!

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையின் கீழ் மேலும் இலங்கையர்கள் 222 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கட்டார், ஜேர்மன் மற்றும் மாலைத்தீவு நாடுகளில் இருந்து அவர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையத்தினை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கட்டார் நாட்டில் இருந்து 42 பேர் மத்தளை விமான நிலையத்தினை வந்தடைந்ததுள்ளனர்.

இதேவேளை ஜேர்மன் நாட்டில் இருந்து ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தார்.

இதனிடையே மாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் 178 பேர் மத்தளை விமான நிலையத்தினை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts