பல்லின மக்கள் வாழும் நாட்டில் சமத்துவ ஆட்சியே வேண்டும்: க.இன்பராசா..!!

அதிகூடிய பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடுஇ நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றிய சேவையினை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பதவியேற்ற பிரதமரை வாழ்த்தும் முகமாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிடுகையில்இ

நடைபெற்று முடிந்த 2020 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் அதிகூடிய பெரும்பான்மையைப் பெற்று நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் நாட்டின் எதிர்காலம் கருதி அனைத்து மக்களுக்கும் பாராபட்சமின்றிய சேவையினை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Related posts