ரஷ்ய எல்லைக்குள் நடத்தப்படும் எந்தத் தாக்குதலுக்கும் பதிலடி தரப்படும் ..!!

தங்கள் நாட்டின் எல்லைப்பகுதிக்குள் ஏவப்படும் எந்த ஏவுகணையையும் அணுசக்தி தாக்குதலாக கருதி பதிலடி தரப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கிராஸ்னயா ஸ்வெஸ்டாவில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை ஏவுதல் குறித்த தகவல்கள் தானாகவே ரஷ்ய, இராணுவ மற்றும் அரசியல் தலைமைக்கு அனுப்பப்படும் என்றும் இது வளர்ந்து வரும் சூழ்நிலையைப் பொருத்து அணுசக்தி தாக்குதலுக்கு நிகரான பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில் அணுசக்தி இன்றி நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா தயாரிப்பதாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்கு எதிர்மறையாகவே ரஷ்ய பத்திரிக்கையில் இவ்வாறு கருத்து தெரிவிக்கபட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts