புகையிரத சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு..!!

காட்டு யானை ஒன்று புகையிரதத்தில் மோதுண்டதன் காரணமாக வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீ தேவி புகையிரதத்தில் மாங்குளம் மற்றும் புளியங்குளம் இடையே குறித்த யானை மோதுண்டதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் தண்டவாளம் தடம்புரண்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் புகையிரதத்துடன் மோதுண்ட காட்டு யானை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts