பிரேசிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

கொவிட்-19 காரணமாக பிரேசிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதோடு தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனை கடந்துள்ளது.

பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 841 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 46 ஆயிரத்து 305 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய பிரேஷிலில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 13 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளதோடு ஒரு லட்சத்து 543 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 97 லட்சத்து 86 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் 7 லட்சத்து 28 ஆயிரத்து 566 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் ஒரு கோடியே 27 லட்சத்து 6 ஆயிரத்து 267 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts