பதவியில் இருந்து விலக ரணில் தயார்..!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலில் அடைந்த மிக மோசமான தோல்வியை அடுத்து ஏற்பட்டுள்ள சூழல் சம்பந்தமாக ரணில் விக்ரமசிங்க, கட்சியில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் கடந்த சில தினங்களாக கலந்துரையாடியுள்ளதுடன் கட்சியின் நலனுக்காக தான் தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக கூறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

கட்சியின் அடுத்த தலைவராக யாரை அறிவிப்பது என்ற பெரிய பிரச்சினை காரணமாக ரணில் விக்ரமசிங்க, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ருவான் விஜேவர்தனவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை கையளிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டாலும் இப்படியான கஷ்டமான நேரத்தில் அவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை கையளித்தால், கட்சி மேலும் சிதறுண்டு அழிந்து போவதை தவிர்க்க முடியாது என ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related posts