நாடு திரும்பிய மேலும் 420 பேர்..!!

கொரோனா காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் 420 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தனர்.

கட்டாரில் இருந்து 43 பேர் இலங்கை வந்திருந்த நிலையில் இதில் 27 பேர் இலங்கையர்களாவர். ஏனைய 16 பேரும் கட்டாரில் இருந்து இலங்கை வந்த தூதரக அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருக்கும் தற்போது பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா காரணமாக சீனாவில் சிக்கியிருந்த மேலும் 112 பேரம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வருகைத் தந்திருந்த இவர்கள் தற்போது பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts