நரேந்திர மோடியின் அழைப்பு..!!

புதிதாக மேம்படுத்தப்பட்ட குஷினகர் விமான நிலையத்திற்கு முதல் சர்வதேச விமானத்தை தரையிறக்குவதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமை குறித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோதே இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி பௌத்த மதத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும், சுற்றுலாத்துறை மட்டுமல்லாமல் தொல்பொருள் போன்ற பிற துறைகளுடன் தொடர்புடைய திட்டங்களைத் தொடங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இதன்போது தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுக்கு மேலதிகமாக, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக ஸ்ரீ லங்;கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts