சீன விஞ்ஞானிகள் தகவல்..!!

சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பமான கொரோனா வைரஸ் தொற்று தற்போது முழு உலகையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது.

எவ்வாறாயினும் தற்போது சீனாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தற்போது சீனாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளமை அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். ஆரம்பத்தில் சீனாவில் இந்த வைரஸ் வேகமாக பரவினாலும் பிறகு மெல்ல கட்டுப்பாட்டிற்குள் வர தொடங்கியது. எனினும் அங்கு மீண்டும் இரண்டாவது அலையாக கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த மக்கள் பலருக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களிடம் நடத்திய சோதனையில் 90 சதவிகிதம் பேருக்கு நுரையீரல் சுவாச பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிக்காத ஒருவரின் சுவாச தன்மையை விட, கொரோனா பாதித்து குணமான ஒருவரின் சுவாச தன்மை மிகவும் பலவீனமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்களை நடக்க செய்து சோதனை செய்ததில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களால் 6 நிமிடத்தில் 400 மீட்டர் நடப்பதே சிரமமாக இருந்தது என்றும், சாதாரணமான மனிதர்கள் 6 நிமிடத்தில் 500 மீட்டரை எளிதில் கடந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related posts