சஜித்தை எச்சரிக்கும் மனோகணேசன்..!!

தேசிய பட்டியல் நியமனத்தில் விளையாட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருக்கும் 7தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கும் சிங்களவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு த.மு.கூ, ஸ்ரீ.ல.மு.கா, அ.இ.ம.கா ஆகிய கட்சிகள் அவசர கூட்டமொன்றை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தன.

அதற்கமைய நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற குறித்த கூட்டத்தில் “ஐக்கிய மக்கள் சக்தியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால் த.மு.கூ, ஸ்ரீ.ல.மு.கா,  அ.இ.ம.கா  ஆகிய சிறுபான்மை கட்சிகள், நாடாளுமன்றத்தில்  தனிக்குழுவாக அமர வேண்டிய நிலையை ஏற்படுமென மனோ கணேசன் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, இவ்விடயத்தில் உரிய தீர்வை முன்வைக்குமாறு குறித்த சிறுபான்மை கட்சிகள் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts