கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல்  நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts