அங்கஜன் முக்கிய வேண்டுகோள்..!!

யாழ்.மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அங்கஐன் இராமநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “வரலாற்றில் இம்முறை முதற் தடவையாக ஒரு ஆசனம் கிடைத்து இருக்கின்றது.

தமிழ் மக்கள் வாக்குகளினாலும் அதிகூடிய விருப்பு வாக்குகளினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சிறுபான்மை மக்களிடம் பிரதித்துவம்படுத்தியதே இல்லை. எனினும் நாங்கள் செய்கின்ற வேலைத்திட்டம் மற்றும் செய்யபோகின்ற வேலைத் திட்டத்திற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆகவே சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளை முன்னோக்கி கொண்டுச்  செல்ல வேண்டும். இதனால் யாழ்.மாவட்டத்தை பிரதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts