19ஆவது திருத்தம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்..!!

19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பில் அதிக வாக்குகளை பெற்ற சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ’19 வது திருத்தத்தின்  ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் காரணமாக சுயாதீன நிலைமை ஏற்பட்டுள்ளதா?

குறித்த ஆணைக்குழுக்கள் அரசதுறை ஊழியர்களின் நடவடிக்கைகளை முடக்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்தது.

மேலும் ஜனாதிபதியின் அதிகாரம் இந்த ஆணைக்குழுக்களால்  இல்லாமல் போயுள்ளது.

அத்துடன் 19வது திருத்தத்தின் மோசமான விளைவுகளை நாங்கள் இன்னமும் எதிர்கொள்கின்றோம்.

ஆகவே இதனை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts