ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஜப்பான் வாழ்த்து..!!

நிறைவடைந்த  பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜப்பான் அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஜப்பான் துதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி மற்றும் மாலைதீவின் துணை அரச தலைவர் பைசல் நசீம் ஆகியோர் ருவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால்  முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியில்கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தமது உறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

Related posts