ஸ்கொட்லாந்தில் முகக்கவசம் அணிவது விரிவுப்படுத்தப்படுகிறது..!!

அண்மையில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் அதிகமான உட்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிவிட்டன.

இரு நாடுகளிலும் இப்போது முகக்கவசம் அணிய வேண்டிய இடங்களில் அருங்காட்சியகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நீர்வாழ் காட்சிசாலை அடங்கும்.

இங்கிலாந்தின் பிற புதிய அமைப்புகளில் சினிமாக்கள் மற்றும் இறுதிகிரியை மற்றும் ஸ்கொட்லாந்து வங்கிகள் மற்றும் அழகு நிலையங்கள் ஆகியவை அடங்கும்.

வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து பொது மூடப்பட்ட இடங்களிலும் திங்கட்கிழமை முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிவிடும்.

சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதி நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெல்ஜியம், அன்டோரா மற்றும் பஹாமாஸில் இருந்து இப்போது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து அல்லது வடக்கு அயர்லாந்திற்கு வரும் எவரும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். இதே விதிகள் ஏற்கனவே வேல்ஸிலும் நடைமுறையில் உள்ளது.

முன்னதாக ஸ்பெயின் மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து வந்த பயணிகள் தனிமைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts