பொலிஸ் முக்கிய அறிவிப்பு..!!

பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

பொதுத்தேர்தல் நிறைவடைந்து  பெறுபேறுகள் வெளியான நாள் முதல் ஒருவார காலம் நிறைவடையும் வரையில், பேரணிகள், கூட்டங்களை நடத்த வேண்டாமென  சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகரான சட்டத்தரணி ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts