பியோனா ஃபெரோ அரையிறுதிக்கு முன்னேற்றம்..!!

பெண்களுக்கே உரித்தான ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரின், காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் கமிலா ஜியோர்கி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், இத்தாலியின் கமிலா ஜியோர்கியும், உக்ரேனின் தயானா யஸ்த்ரெம்ஸ்காவும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டில், சிறப்பாக விளையாடிய தயானா யஸ்த்ரெம்ஸ்கா, செட்டை 6-4 என கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் ஆக்ரோஷமாக விளையாடினர்.

இதனால் செட் டை பிரேக் வரை நீண்டது. இதில் ஆக்ரோஷமாக விளையாடிய கமிலா ஜியோர்கி, செட்டை 7-6 என கைப்பற்றினார்.

இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இதில் யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடிய கமிலா ஜியோர்கி, 6-3 என செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
…….

இதேபோல மற்றொரு காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் சாரா எர்ரானி, வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் சாரா எர்ரானி, பிரான்ஸின் பியோனா ஃபெரோவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பியோனா ஃபெரோ முதல் செட்டை 6-4 என போராடிக் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய பியோனா ஃபெரோ, செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பியோனா ஃபெரோ, இத்தாலியின் கமிலா ஜியோர்கியை எதிர்கொள்ளவுள்ளார்.

Related posts