தொற்று நீக்கல் நடவடிக்கை..!!

பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலைகள், அரச திணைக்களங்கள் உட்பட வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தலைமையில் முப்படையினரின் ஒத்துழைப்புடன் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts