தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை சமர்ப்பிக்க ஒரு வாரம் …!!

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சியினரதும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் பொதுத்தேர்தல் தேசியப் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமது கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினரின் பெயர் விபரத்தினை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts