கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா..!!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அமெரிக்க பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக அமெரிக்க தொழிற்துறை இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஜூலை மாதத்தில் 1.8 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதோடு வேலையின்மை 10.2 வீதமாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்திலுள்ள அமெரிக்காவில் புதிய வேலைகள் உருவாக்கம் நல்ல செய்தியென குறிப்பிடப்படுகிறது.

கடந்த  ஜூன் மாதத்தில் 4.8 மில்லியன் வேலை இழப்புக்கள் ஏற்பட்டது. பண்ணையில்லாத ஊதியக் குறைப்பு, நாட்டின் ஏற்பட்ட பொதுமுடக்கம், முடக்கக் கட்டுப்பாடுகளின் தளர்வையடுத்து கொரோனா தொற்றுநோயாளர்களின் அதிகரிப்பு என்பன வேலையிழப்புக்களை அதிகரிக்கச் செய்தன.

ஆனால், மில்லியன் கணக்கான மக்கள் வேலை இழந்தாலும், மில்லியன் கணக்கானவர்கள் அவற்றை மீண்டும் பெற்றுள்ளனர். இதன்படி, கடந்த மாதம் வேலையில்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியன் குறைந்து 16.3 மில்லியனாக இருந்தது.

இந்நிலையில், கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்டு முன்னைய பொருளாதார வலிமையைப் பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts