கொரொனா தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 12 பேர் சற்று முன்னர் குணமடைந்துள்ளனர்.

தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2574ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2839 ஆகவும் காணப்படுகின்றது.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 264 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.

Related posts