1.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை..!!

மோசமான வெடிப்பு சம்பவத்தின் பின்னர் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள லெபனானுக்கு டென்மார்க் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

முக்கியமாக செஞ்சிலுவை சங்கம் வழியாகவும், 600 இரசாயன பாதுகாப்பு அங்கிகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

அபிவிருத்தி அமைச்சர் ராஸ்மஸ் ப்ரெஹ்ன் கூறுகையில், ‘பெயிரூட் வெடிப்பு சம்பவம் மிக மோசமான நேரத்தில் வந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்கனவே வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது கொவிட்-19 நிலைமையை மோசமாக்குகிறது. அதே நேரத்தில், நாடு 1.5 மில்லியன் அகதிகளுக்கு தாயகமாக உள்ளது. அவர்களுக்கு ஆதரவு தேவை’ என கூறினார்.

இந்த ஆண்டு இதுவரை, டென்மார்க் லெபனானுக்கு 32 மில்லியன் குரோனரை (5.1 மில்லியன் டொலர்) மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. முக்கியமாக டென்மார்க், மத்திய கிழக்கு நாட்டில் உள்ள அகதிகளுக்கு உதவுகிறது.

Related posts