நன்றி தெரிவித்த பிரதமர்..!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “செழிப்பான நோக்கம்” என்ற கொள்கையை நம்பி வாக்களித்து பெரும்பான்மையை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தி ஒன்றை பதிவிட்டே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை மக்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மீது வைத்துள்ள நம்பிக்கை காப்பற்றப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related posts