வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு..!!

பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இடம்பெற்று வருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலானா மாவட்டங்களில் முதலாவது தேர்தல் பெறுபேற்றை இன்னும் ஒரு சில மணிநேரத்தில் வழங்கக்கூடியதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள், நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 77 வாக்கு எண்ணும் நிலையங்களில் இடம்பெற்று வருகின்றன.

வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களின் வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காவல்துறை விசேட அதிரடிப் படையினர் சிவில் பாதுகாப்பு படையினர் உட்பட 6 ஆயிரத்து 500 பேர் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களின் வளாகத்தில் விசேட வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts