லெபனானுக்கு உதவ பிரித்தானியா தயாராக உள்ளது..!!

பெயிரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களையும் மனிதாபிமான உதவிகளையும் லெபனானுக்கு அனுப்ப பிரித்தானியா தயாராக உள்ளது என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

லெபனான் மக்களுக்கு அவர்களின் தேவைப்படும் நேரத்தில் துணை நிற்கும் என்றும் 5 மில்லியன் பவுண்டுகள் உதவிப் பொதியை அளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

விஷேட பயிற்சி பெற்ற மோப்பநாய்களுடன் மீட்புப் பணியாளர்களையும், ரோயல் கடற்படைக் கப்பலையும் பிரித்தானியா அனுப்பும்.

அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ள இந்த வெடிப்பில், குறைந்தது 135பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5,000 பேர் காயமடைந்தனர்.

Related posts