முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்..!!

தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்த 374 கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்  மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு ஆயிரம் படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன.  இதே கட்டிடத்தில் 150 ஐ.சி.யு படுக்கைகள் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 3ஆயிரத்து 374கர்ப்பிணிகள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குழந்தைகளும் நலமாக உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts