பல்வேறு பகுதிகளில் மின்சாரத் தடை..!!

சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கான மின்சாரம் தடைபட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மின் தடை விரைவில் சீரமைக்கப்படும் என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இரத்தினபுரி, கிரிஎல்ல, மதுகம, பாதுக்க, ஹோமாகம, அவிசாவளை, பயாகல மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் பகுதிகளில் பலத்த காற்று வீசியதன் காரணமாக சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts