தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டாரா பிரதமர்..!!

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய்யென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நாமல் கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் அவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்கள் விரும்பும் ஒரு தலைவர்.

எனவே வாக்களிப்பதற்கு பிரதமர் வருவதை அறிந்த மக்கள், அவரை காண்பதற்காக ஆர்வமாக வந்தார்கள்.

இவ்வாறு வந்த மக்களிடம் பிரதமர்  சாதாரணமாக பேசினாரே தவிர வாக்களிக்குமாறு கோரவில்லை.

எனவே ஜனநாயகம் மற்றும் தேர்தல் சட்டங்களைப் பாதுகாப்பது குறித்து தேசிய மக்கள் சக்தி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு கற்பித்துக்கொடுக்க தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts