துறைமுக அதிகாரிகளை வீட்டுக் காவலில் வைக்க அரசாங்கம் உத்தரவு..!!

உலகையே உலுக்கிய பெயிரூட் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை புலனாய்வாளர்கள் தொடங்கியுள்ள நிலையில், பல துறைமுக அதிகாரிகளை வீட்டுக் காவலில் வைக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது, வெடிப்பு சம்பவத்தை விசாரிக்கும் லெபனானில் புலனாய்வாளர்கள், டன் கணக்கான வெடிக்கும் உரத்தை ஒரு நீர்ப்பரப்பு கிடங்கில் வைக்கப்பட்டமை குறித்து விசாரித்து வருகின்றனர்.

சுமார் 2,750 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டுடன் ஆறு ஆண்டுகளாக துறைமுகத்தில் ஒரு துறைமுகக் கிடங்கில் சேமித்து வைத்திருக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ள இந்த வெடிப்பில், குறைந்தது 135பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5,000 பேர் காயமடைந்தனர்.

தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுவதற்காக, அவசரகால ஊழியர்கள் இடிபாடுகளில் தோண்டிவருவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகின்றது.

300,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பெய்ரூட் ஆளுநர் மர்வான் அபாட், வெடிப்பில் ஏற்பட்ட இழப்புகள் 10 பில்லியன் டொலர் முதல் 15 பில்லியன் டொலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளார்.

லெபனானின் அமைச்சரவை தலைநகரில் இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்து, நகரத்தில் பாதுகாப்பு கட்டுப்பாட்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது.

Related posts