800 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு..!!

இரண்டாவது கொவிட்-19 தொற்றலையை எதிர்த்து போராட, வேல்ஸ் தேசிய சுகாதார சேவை 800 மில்லியன் பவுண்டுகள் நிதி, அமைச்சர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) விநியோகத்தை அதிகரிக்க பெரும்பாலான பணம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கள மருத்துவமனைகளைத் தக்க வைத்துக் கொள்ள இந்த பணம் பயன்படுத்தப்படும். மேலும் 11.7 மில்லியன் பவுண்டுகள் வேல்ஸின் மிகப்பெரிய காய்ச்சல் நடவடிக்கைக்கு நிதியளிக்கப்படும்.

இந்த அறிவிப்பு தொற்றுநோய்க்கு பதிலளிக்க வேல்ஸ் தேசிய சுகாதார சேவைக்கு தேவையான ஸ்திரத்தன்மையை வழங்கும் என்று தான் நம்புவதாக நிதியமைச்சர் ரெபேக்கா எவன்ஸ் கூறினார்.

Related posts