ஸ்பெயினின் முன்னாள் மன்னர் எங்கு இருக்கிறார்..?

நாட்டை விட்டு வெளியேறுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்து ஸ்பெயினின் ஊடகங்கள் பல ஊகங்களை வெளியிட்டுள்ளன.

ஊழல் விசாரணைக்கு உட்பட்ட 82 வயதான ஜுவான் கார்லோஸ், எங்கு செல்கிறார் என்ற விபரங்களை அறிவிக்கவில்லை.

ஆனால், அவர் டொமினிகன் குடியரசிற்குச் சென்றதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் வந்ததாக எந்த தகவலும் இல்லை என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜுவான் கார்லோஸ் கரீபியனுக்குள் வந்ததாக தகவல்கள் வந்தாலும் அவர் நாட்டிற்குள் நுழையவில்லை என கரீபியன் நாட்டின் குடிவரவு சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பெப்ரவரி பிற்பகுதியிலிருந்து மார்ச் தொடக்கத்தில் சில நாட்கள் அவர் அங்கு இருந்ததாக அவர் கூறினார்.

பிரதமர் பெட்ரோ சான்செஸ், முன்னாள் மன்னர் எங்கே இருக்கிறார் என்று தனக்குத் தெரியாது என்று கூறுகிறார்.

Related posts