வாக்குச் சீட்டுகளை ஒளிப்படம் எடுத்தவர் கைது..!!

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை  கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) காலை நாவலபிட்டிய- இம்புல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞரே (32 வயது)  குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய மத்திய கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியிலேயே குறித்த இளைஞன், வாக்குச் சீட்டுகளை  கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts