பெயிரூட் வெடிப்பு சம்பவம்..!!

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு, 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தூண்டியுள்ளது என்று ஜேர்மனியின் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

மத்தியதரைக் கடலில் 200 கிலோமீட்டர் (180 மைல்) தொலைவில் சைப்ரஸ் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நகரின் துறைமுகத்தில் சுமார் 2,700 டன் என மதிப்பிடப்பட்ட ஒரு பெரிய அம்மோனியம் நைட்ரேட், சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்த இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 4,000 பேர் காயமடைந்தனர்

Related posts