ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ரணில்..!!

ஐக்கிய தேசியக் கட்சின் தலைவரும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் அவர் இன்று (புதன்கிழமை) பகல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

9ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்றுவருகின்ற நிலையில், கொழும்பு மாவட்டத்தில் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் இன்று காலை 10 மணிவரையான காலப்பகுதியில் 34 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts