சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியின் வெற்றிபயணம் தொடருமா?

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியானது மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், பாகிஸ்தான் அணிக்கு அசார் அலியும் தலைமை தாங்கவுள்ளனர்.

இங்கிலாந்து அணி முன்னதாக சொந்த மண்ணில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்தத் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

இதேவேளை, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து வந்துள்ளது. எனவே இப்போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Related posts