இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு மங்கள அழைப்பு..!!

கட்சி அரசியலுடன் தொடர்புப்படாத அரசியல் அமைப்பொன்றை உருவாக்க முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அமைப்புக்கு உண்மையான தேசப்பற்றாளர்கள் என பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த அமைப்புக்கு பிரபல அரசியல்வாதிகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts