அச்சமின்றி வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்..!!

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் சகல வாக்காளர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எனவே எந்தவித அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் சகல வாக்காளர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் கைகளை சுத்தப்படுத்துவது  அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்களிப்பு நிலையத்தில் முதலாவது உத்தியோகத்தரிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைக் சமர்ப்பிக்க   வேண்டும் என வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன்  ஒவ்வொரு வாக்காளருக்கும் தொற்று நீக்கப்பட்ட பேனை  அல்லது பென்சில் வழங்கப்படவுள்ளது.

இதனிடையே  வாக்காளர்கள்  கருப்பு அல்லது நீல நிற பேனை கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

வாக்கினை செலுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேறும்போது கைகளை சுத்தப்படுத்துவதும்  அவசியமாக்கப்பட்டுள்ளது.

Related posts