பொலிஸாரிற்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது பல் துலக்குவதற்கு அல்ல..!!

தேர்தல் நடைபெறும் நேரத்தில் எவ்வித தேர்தல் மோசடிகளும் இடம்பெற வாய்ப்பில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அடிவாங்கி தலையில் துப்பாக்கியை வைத்து வாக்களித்த காலமும் இருந்தது. ஆனால் இப்போது யாரும் அவ்வாறு செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது பற்தூரிகை போன்று பல் துலக்குவதற்கு அல்ல என நாங்கள் பொலிஸாரிற்கு அறிவித்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு பெட்டிகள் மற்றப்படலாம் என்ற கருத்து வெறும் கற்பனை மாத்திரமே இம்முறை தேர்தலில் அது ஒன்றும் நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts