சட்ட விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு கோரிக்கை..!!

பொதுத்தேர்தலின் தற்போதைய அமைதியான காலகட்டத்தில் தேர்தல் சட்ட விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக்குழுக்களின் வேட்பாளர்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) இதனை தெரிவித்துள்ளது.

தற்போதைய அமைதியான சூழலில் சில அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளன.

மதவிழாக்களை ஏற்பாடு செய்வதாக கூறி சிலர் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts