90பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..!!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பினை பேணிய 19 குடும்பங்களைச் சேர்ந்த 90பேர் பொலன்னறுவையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை- லங்காபுர பகுதியிலுள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்பினை பேணிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரே அவரகளது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் லங்காபுர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சிவில் பாதுகாப்புப் படையினரின் மனைவி மற்றும் மகள் தற்போது  பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலுள்ள  கொரோனா வைரஸ் தொற்று சந்தேகநபர்களின் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் சஞ்சயா செனவிரத்ன  தெரிவித்துள்ளார்.

Related posts