தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்தது..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரேநாளில் மாத்திரம் 52 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 இலட்சத்து 4 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளதுடன், புதிதாக 758 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு 11 இலட்சத்து 87 ஆயிரத்து 228 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் 5 இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்த 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சுகாதாரத்துறை மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts