உணவகங்கள் மீண்டும் திறப்பு..!!

வேல்ஸில் மேலும் கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாட்டு விதிகள் தளர்த்தப்படுவதால், இன்று (திங்கட்கிழமை) முதல் உட்புற பப்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், 30 பேர் கொண்ட குழுக்கள் சந்திக்க முடியும் மற்றும் பல இளம் குழந்தைகள் வெளியில் விளையாட முடியும்.

பிங்கோ அரங்குகள் மற்றும் பந்துவீச்சு மையம் (bowling alleys) ஆகியனவும் மீண்டும் திறக்கப்படுகின்றன.

இங்கிலாந்தின் வடமேற்கில் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் வேல்ஸில் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு முன்பு சற்று யோசிக்க வைத்ததாக முதல் அமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட், தெரிவித்தார்.

தங்களால் இயன்றவரை சமூகமயமாக்குவதை மக்கள் அனுமதிக்க விரும்புவதாகக் அவர் மேலும் கூறினார்.

Related posts